கோர்ட்டு முன்பு சரக்கு போட்டுவிட்டு நீதி கேட்ட நபரால் பரபரப்பு!

ஜி.கே.சேகரன்,
நீதிமன்றம் அருகே மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் வைத்துகொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை சத்துவாச்சாரி காவல்துறையினர் சாமர்தியமாக கைது செய்து அழைத்துச்சென்றனர். அவருக்கு நீதி வேண்டும் என்று கோரி இந்த மிரட்டலை விடுத்தாராம்.
வேலூர் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி சங்கர்(37). இவர் தொரப்பாடி கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவ.ர் இவர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மதுகடையில் மது குடித்துவிட்டு மதுபோதையில் பேருந்தை மடக்கி தகராறு செய்துள்ளார்.
இதனை கண்ட வடக்கு காவல்துறையினர் மதுபோதையில் இருந்த ஆசாமியை காவல்நிலையம் அழைத்து சென்று எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனா.
ஆனால் அவர் மேலும் மதுவை குடித்துவிட்டு சத்துவாச்சாரியில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் முன்பாக மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் வைத்துகொண்டு தற்கொலை செய்துகொள்ள போவதாகவும் எனக்கு உடனே நீதி வழங்க வேண்டுமென நீதிமன்றம் முன்பு மிரட்டல் விடுத்தா£.
தகவல் அறிந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் குடிமகனை கைது செய்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர் மது போதையில் தகராறில் ஈடுபட்ட சங்கர் எச்சரித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.