பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு!பிரேமலதா பேச்சு!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு!பிரேமலதா பேச்சு!

கு.அசோக்,

 தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளது, கஞ்சா விற்கும் ஆட்சியை நாட்டை விட்டே அகற்ற வேண்டும் என்று அரக்கோணம் மற்றும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் பிரேமலதா.  

 அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயனை ஆதரித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா வாக்குகளை சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன் கொடுமை குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பேசினார்.

 இதே போல் வேலூர் மாவட்ட குடியாத்தத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதியை ஆதரித்து பிரேமலதா பேசுகையில்,  இங்கு நம்ம வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் துரைமுருகனின் மகன். அவர் பிரச்சாரத்தின் போது பெண்களை கேலி செய்து பேசியிருக்கிறார். அவருக்கு தேர்தல் அன்றைக்கு பெண்கள் பாடம் கற்பிப்பார்கள். ஐந்து ஆண்டுகளில் தொகுதி பக்கமே வராதவர் தான் மீண்டும் இங்கு திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

 அதே போல் இந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் இது தான் எனக்கு கடைசி தேர்தல் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

 ஆனால் அதிமுக வேட்பாளர் பாருங்கள் சிரிப்புடன் சுறுசுறுப்பாக உங்களிடையே வாக்கு கேட்கிறார். மக்கள் நீங்கள் இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். கஞ்சா விற்கும் இந்த அரசு வீட்டிற்கு அனுப்ப அதிமுக கூட்டணியை ஆதரியுங்கள் என பேசினார்.