தாலிக்கு தங்கம் வழங்கிய அதிமுகவின் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
ஜி.கே.சேகரன்,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேசை ஆதரித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பட்டை கோவிலில் சாமிதரிசனம் செய்த பின்னர் பட்டை கோவில் கடைவீதி பகுதியில் வியாபாரிகள், பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னாதாக, திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்குட்ப்பட்ட திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர் கலியபெருமாளை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
2019 ம் ஆண்டு, அதிமுக ஆட்சியில், திருப்பத்தூர் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததே அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்யத்தான். ஏழை பெண்கள் வாழ்க்கை மேம்பட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாலிக்கு தங்கம் என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தார். அதேபோல, திருமண உதவித்திட்டத்தை கொண்டு வந்தார்.
இந்த திட்டம் தற்போது திமுக அரசு ரத்து செய்துள்ளது. இதனால், பல ஏழை பெண்களின் திருமணம் தடைப்பட்டுள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை கடந்துவிட்டது. இது போன்ற சூழ்நிலையில் தாலிக்கு தங்கம் என்ற திட்டம் ரத்து செய்யாமல் இருந்து இருந்தால் பெண்கள் மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள்.

ஆகவே, பெண்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு இந்த தேர்தல் மூலம் தோல்வி என்ற தண்டனையை ஏழை பெண்கள் வழங்க வேண்டும்.
அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், அவர்கள் விஞ்ஞான கல்வி பெற லேப்டப் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ரூ.7,300 கோடி மதிப்பில் 52 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டப் வழங்கினோம். அதேபோல, பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கினோம். இந்த திட்டங்களை விடியா திமுக அரசு ரத்து செய்துள்ளது என்று பேசினார்.

admin
