தீபாவளி விருந்துக்காக சந்தையில் குவியும் ஆடுகள்!
ஜி.கே.சேகரன்,
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அமோகமாக விற்பனையாகும் ஆடுகள்!. ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் வியாபாரிகள்
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர் சந்தை மைதானத்தில் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும், திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது.
அதே போல் அருகில் உள்ள பொன்னேரி, ஏலகிரிமலை, நாட்றம்பள்ளி, மண்டலவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஆடுகள் வாங்க குவிந்தனர்.
3 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ப ஆடுகள் விலை போனது. இதில் ஏராளமான வியாபாரிகள் தீபாவளி பண்டிகை ஒட்டி ஆடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

admin
