ரேபிடோ, ஒலா, உபர் சர்வீஸ் கூடவே கூடாதம்! ஆட்சியரிடம் மனு அளித்த ஆட்டோக்காரர்கள்!

ரேபிடோ, ஒலா, உபர் சர்வீஸ் கூடவே கூடாதம்! ஆட்சியரிடம் மனு அளித்த ஆட்டோக்காரர்கள்!

 கு.அசோக்,

 வேலூரில் ரேபிடோ, ஒலா, உபர்  போன்ற கார்பரேட் நிறுவனங்கள் இருசக்கர வாகனத்தில் பயணிகளை ஏற்றி செல்லும் செயலை தடுக்க கோரி  ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்

  வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோக்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டர்.

  பின்னர், மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமியிடம் மனு அளித்தனர். 

 அம்மனுவில் ஆட்டோ தொழில் என்பது தினக்கூலி தொழிலாகும். ஆனால் அவர்கள் வயிற்றில் அடிக்கும் விதமாக தனி நபர் பயன்பாட்டிற்கு இருக்கும் இருசக்கர வாகனத்தை ரேபிடோ .ஒலா உபர் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களை ஏற்றி சென்று கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.

 இதனால் ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுகிறது.

 எனவே இருசக்கர வாகனத்தில் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் ஆட்களை ஏற்றி கொண்டு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

  ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தனர்.

 ஆமாம் இவுங்க ஒரு ஆட்டோவில் பத்து பேரை ஏற்றிச்செல்வதை யார் கேள்வி கேட்பதாம்?