துணை முதல்வர் உதயநிதியும் இறகு பந்து போட்டியும்!
க.பாலகுரு,
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இறகு பந்து போட்டியை பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் ஒன்றிய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இதனை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளர் பூண்டி கலைவாணன் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார்.
திருவாரூர் நாகை சாலையில் புதிதாக கட்டப்பட்ட இறகு பந்து மைதானத்தில் தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளிலிருந்து சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் சேர்த்து 20 அணிகளை சேர்ந்த வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர்.
காலையில் தொடங்கிய இறகுபந்து போட்டி மாலையில் முடிவடைந்தது.
முதல்பரிசு காரைக்கால் அணியைச்சேர்ந்த ஆதித்யன்,தொல்காப்பியன் ஆகியோர் பெற்றனர். அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு காரைக்காலைச் சேர்ந்த அபிலேஷ் , செந்தமிழ் ஆகியோருக்கு ரூபாய் 12 ஆயிரம் ரொக்கபரிசு கோப்பையும் , மூன்றாம் பரிசு திருவாரூரைச் சேர்ந்த முஸ்ரப் , சலீம் ஆகியோருக்கு ரூபாய் 8 ஆயிரம் ரொக்க பரிசு கோப்பையும் , நான்காம் பரிசு திருவாரூரை சேர்ந்த வெற்றி , பிரபாகர் ஆகியோருக்கு ரூபாய் 6 ஆயிரம் ரொக்க பரிசு கோப்பையும் , ஆறுதல் பரிசாக இரண்டு அணியினருக்கு சிறப்பு பரிசுகளையும் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் புலிவலம் தேவா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில்: நகர கழக செயலாளர் வாரை. எஸ். பிரகாஷ், பேரூர் கழக செயலாளர் பூண்டி கே. கலைவேந்தன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் அமைப்பாளர்கள் எம். என். ராஜா, வி.என்.ஆர். பன்னீர்செல்வம், பி.ஜி.ஆர். ராஜாராமன், பெ.இளவரசன், ஜி. கோபிநாத் தீ விமல்ராஜ் போ பத்ம பிரசாத், ஜாகிர் உசேன், எழில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஹரிஹரசுதன் தேவா, துணை அமைப்பாளர்கள் சரவணன், சந்திரசேகர்,சிராஜ்,மாதவன் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

admin
