மத்திய அமைச்சரை திடீரென சந்தித்த திமுக எம்.பி., டி.ஆர்.பாலு! இது தான் காரணமாம்!

மத்திய அமைச்சரை திடீரென சந்தித்த திமுக எம்.பி., டி.ஆர்.பாலு! இது தான் காரணமாம்!

  ம.பா.கெஜராஜ்

 மத்திய அமைச்சர் முரளிதரனை, திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நேற்று மாலை டெல்லியில் சந்தித்தார்.

 கடந்த சில நாட்களுக்கு முன்  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

  இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் நேற்று கடிதம் எழுதிய நிலையில் இன்று மத்திய அமைச்சரை டி.ஆர். பாலு சந்தித்துள்ளார்.  இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தும்,

மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அப்போது மத்திய அமைச்சரிடம்  திமுக எம்.பி., டி.ஆர்.பாலு வழங்கினார்.

மத்திய அமைச்சருடனான இந்த சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.