என் தலைமுடியைக்கூட தொட முடியாது! பெண் எம்பி பரபரப்பு பேட்டி!

என் தலைமுடியைக்கூட தொட முடியாது! பெண் எம்பி பரபரப்பு பேட்டி!

கொ.பர்வேஸ்,

 என்னுடைய தலை முடியை கூட தொட முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்பி மஹுவா மொய்த்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

  நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து அவர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

   திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்பி மஹுவா மொய்த்ரா. அவர்  என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் நபர்களால் எனது தலை முடியை கூட தொட முடியாது என்று தெரிவித்தார்.

   அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் என்பவரிடமிருந்து பரிசு பொருளை லஞ்சமாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அவர் இவ்வாறு காட்டமாக பதில் அளித்துள்ளர்.