மக்களவை தேர்தல் முடிந்தவுடன் தமிழக சட்ட மன்ற தேர்தல் வரும்! அதிமுக அவைத்தலைவர் ஆருடம்!
கு.அசோக்,
மக்களவை தேர்தல் முடிந்தவுடன், 8 மாதங்களில் தமிழக சட்ட மன்ற தேர்தல் வரும் என்று அதிமுக அதிமுக அவைத்தலைவர் ஆருடம் சொல்லியிருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் கையெழுத்து போடக்கூடாது என்று என்னிடம் ஆட்களை வைத்து 5 கோடி ரூபாயை கொடுத்து பேரம் பேசிய ஒ.பன்னீர்செல்வம் - ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேச்சு.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நிகழ்ச்சியானது.
வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்திற்கு, வாலாஜாபேட்டை ஒன்றிய கழக செயலாளர் பூண்டி பிரகாஷ் தலைமை ஏற்றார். சிறப்பு அழைப்பாளராக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்றார்,
அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், தலைமை கழக செயலாளர் எம்ஜிஆர் பித்தன் கலீல் பாஷா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை ஆகியோர் கூட்டத்தில் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் அதிமுக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பேசுகையில், ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் நான் கையெழுத்து போடக்கூடாது என்று பேரம் பேசினார். அதற்காக என்னிடம் 5 கோடி ரூபாயை கொடுக்கச் சொல்லி ஆட்களை என் வீட்டிற்கு அனுப்பினார்.
ஆனால் பணத்தை திருப்பி எடுத்து செல்லுங்கள் என்று கண்டிப்புடன் கூறி அவர்களை வெளியேற்றினேன். இதைப்பற்றி எடப்பாடி பழனிச்சாமியிடம் உடனுக்குடன் தெரிவித்தேன். பணத்திற்காகவோ என்னுடைய உயிர் போவதற்காகவோ இயக்கத்தில் வாழ்பவன் தமிழ் மகன் உசேன் அல்ல, எனது உயிர் எனது மூச்சு எல்லாமே எம்ஜிஆர், ஜெயலலிதா, கழகம் ஆகியவைதான்.
மேலும் நான் மூத்த அரசியல்வாதி என்பதால் சொல்க்கிறேன், என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர், 8 மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் வரும். தேர்தல் களத்தில் அதிமுக வெற்றி பெறும். நாட்டு மக்களால் மீண்டும் தமிழகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி ஆவார்.. ஆவார்.. ஆவார்.. என அடித்து பேசிய அவர் பேச வாய்ப்பு அளித்த இறைவனுக்கு நன்றி என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கிராமத்தில் உள்ள கிராம் பொதுமக்கள் அனைவரும் அயன்பாக்ஸ், தையல் மெஷின், நெல் அறுவடை இயந்திரம், வேட்டி புடவை மற்றும் எண்ணற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்..
முன்னதாக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள்.

admin
