மக்களுக்கு நன்மை செய்ய ஜெகத்ரட்சகன் போட்டியிடவில்லை... சொத்தை காப்பாற்றிக் கொள்ளவே எம்பி பதவியை அடைய விரும்புகிறார்! பாமக வேட்பாளர் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் பாலு மற்றும் திமுக வேட்பாளரும் சீட்டிங் எம் பி யும் ஆன ஜெகத்ரட்சகன் ஆகியோர் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்தனர்.
பின்னர் பாமக வேட்பாளர் பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் மக்கள் நலமைக்காக போட்டியிடவில்லை.அவருடைய சொத்துக்களை காப்பாற்றவே இந்த பதவியை அடைய வேண்டும் என்று துடிக்கிறார்.
நான் வெற்றி பெற்றால் அரக்கோணத்திலேயே வீடுஎடுத்து தங்கி மக்கள் பணியாற்றுவேன் மேலும் இங்கு புற்றுநோயை ஏற்படுத்தும் அனைத்து குரோமியம் கழிவுகளையும் அகற்றுவேன்.
மருத்துவ வசதிகளை மேம்படுத்துவேன். அதிக தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்குவேலை வாய்ப்பை ஏற்படுத்துவேன், நகிரி திண்டிவனம் ரயில் பணிகளை விரைந்து முடிப்பேன் என கூறினார்.

முன்னதாக வேட்பு மனு தாக்கல் செய்த போது, அவருடன் பாமக முன்னாள் நடுவன் அமைச்சர் அரங்க. வேலு ,அமமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கோபால், மற்றும் கூட்டணி கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பாமக வேட்பாளர் பாலுவுக்கு மாற்று வேட்பாளராக ராணிப்பேட்டை பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சரவணன் வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
அவருடன் பாமக நிர்வாகிகள் இளவழகன் ,என்.டி.சண்முகம் ,அ.ம.கிருஷ்ணன், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோல், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் ஜெகத் ரட்சகன் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
முதல்வர் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கியுள்ளார்.
ஆகவே மக்கள் என்னை வெற்றி பெற்ற செய்ய வேண்டுமென கோரினார்.
ஜெகத்ரட்சகன் வேட்பு மூணு தாக்கல் செய்ய வந்தபோது அவருடன் கைத்தறி அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், முனி ரத்தினம் ஆகியோர் வந்தனர்.

admin
