கெட் அவுட் ரவி! தமிழக ஆளுநருக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் திமுகவின் ஹேஷ்டேக்!

கெட் அவுட் ரவி! தமிழக ஆளுநருக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் திமுகவின் ஹேஷ்டேக்!

ம.பா.கெஜராஜ்,

  கெட் அவுட் ரவி... தமிழக ஆளுநருக்கு எதிராக ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக் தான் தற்போதைய டாக் ஆஃப்த நியூஸாக உள்ளது.

 இது குறித்து திமுக தனது டுவிட்டரில் இந்த ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை என  பதிவிட்டுள்ளது.

 மேலும் சனாதனத்திற்கு திராவிடத்தின் மீது எப்போதுமே ஒவ்வாமை தான் என்றும் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர்.         இன்று ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக சட்டசபையில் உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார்.

  பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன.

 தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

 எனவே ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் திமுக வச்சு செய்து வருகிறார்கள்.

   அந்த வகையில் #நிமீtளிutஸிணீஸ்வீ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

  இந்த ஹேஷ்டேக்கில் திமுகவினர் அனல் பறக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

  "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இந்த வார்த்தைகளை படிக்க மறுக்கும் ஆளுநர் எங்களுக்கு தேவையில்லை" என திமுக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

   ஆளுநர் பதவியில் தொடர ஆர்.என்.ரவிக்கு தகுதியில்லை என்றும், அவர் முழு நேர ஆர்எஸ்எஸ் பணிகளையே மேற்கொள்ளலாம். சனாதனத்திற்கு திராவிடத்தின் மீது எப்போதுமே ஒவ்வாமை தான்! என்பதுபோன்ற கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.