மனைவி மற்றும் கள்ளக் காதலனின் தலையை துண்டாக வெட்டி எடுத்து வந்த நபரால் பரபரப்பு!
ஜி.கே.சேகரன்,
மனைவி மற்றும் கள்ளக்காதலனை கொலை செய்து அவர்களின் தலைகளை வேலூர் ஆண்கள் சிறைக்கு கொண்டு வந்தது எப்படி என போலீசார் முன்னிலையில் செய்முறை விளக்கம்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கொளஞ்சியம். கொளஞ்சியத்தின் மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக இருந்ததை நேரடியாக பார்த்து விட்ட களஞ்சியம் மனைவி லட்சுமி மற்றும் மனைவியின் கள்ளக்காதலன் தங்கராசு ஆகிய இருவரின் தலையை தனியாக வெட்டி எடுத்து கள்ளக்குறிச்சியில் இருந்து நேரடியாக வேலூர் மத்திய சிறைக்கு சரணடைவதற்காக இரவு வந்து சேர்ந்துள்ளார்.
சிறை காவலர்கள் பாகாயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அங்கிருந்து போலீசாரை வரவழைத்து அவர் கொண்டு வந்த இரு தலைகளுடன் கொளஞ்சியத்தையும் ஒப்படைத்தனர்.

போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது கொளஞ்சியத்தை வேலூர் ஆண்கள் மத்திய சிறைக்கு அழைத்து வந்து தலைகளுடன் சிறைக்கு வந்தது எப்படி என்பது குறித்து செய்முறை விளக்கம் செய்து காண்பிக்க வைத்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு கொளஞ்சியத்தை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோரின் தலைகளுடன் அனுப்பி வைக்க உள்ளனர்.
இச்சம்பவம் வேலூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

admin
