ஜூம்பா நடனம் ஆடி பயிற்சி!
கு.அசோக்,
ஜூம்பா நடனம் ஆடி மகிழ்ச்சியுடன் உடற்பயிற்சி மற்றும் யோகாசன பயிற்சி மேற்கொண்ட அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலம் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படை 04 படை பிரிவு செயல்பட்டு வருகிறது.
இங்கு சீனியர் கமாண்டண்ட் அகிலேஷ் குமார் தலைமையில் 1000 க்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மீட்பு படை வீரர் மற்றும் வீராங்கனைகள் பணியில் உள்ளனர்.
அவர்கள் வழக்கமாக காலையில் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
இதன் ஒருபகுதியாக நேற்று காலை துணை கமாண்டண்ட் வைத்தியலிங்கம் மற்றும் ஆய்வாளர் அருன் குமார் தலைமையில் வீரர்கள் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் ஏற்படுத்தும் துள்ளல் இசை பாடல்களுக்கும் ஜூம்பா நடனம் ஆடி மகிழ்ச்சியுடன் உடற்பயிற்சி மற்றும் யோகாசன பயிற்சிகள் மேற்கொண்டனர்.

admin
