இருநூறு ரூபாவை காட்டி கம்யூனிஸ்டுகளை கலாய்த்த நாம் தமிழர் தம்பிகள்! நாகபட்டினத்தில் களேபரம்!

 க.பாலகுரு,

நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் ஒரே நேரத்தில் சீமான் மற்றூம் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டதால் பெரும் களேபரம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு கடும் வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.   நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் இன்று நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  ஒவ்வொரு வார்டாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வந்தார்.

  அதே போல், நாம் நமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அபிராமி அம்மன் சன்னதி திருவாசல் பகுதியில் காலை 10:00 மணிக்கு பரப்புரை செய்வதாக இருந்தது.

   ஆனால் சீமான் காலை 11:0  மணிக்கு மேல் பரப்புரைக்கு வந்ததால் அப்போது அந்த வழியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் திறந்த வெளி வாகனத்தில் வாக்கு கேட்டு வந்தார். அப்போது கலைக்குழு வாகனங்கள், பிரச்சார வாகனங்கள் சீமான் பேசும் இடத்திற்கு வரும் போது நாம் தமிழர் கட்சியினர் வழியை மறித்து நின்று பிரச்சார வாகனங்களுக்கு வழி விடாமல் மாற்று வழியில் செல்லுமாறு கொடி கம்பால் அடித்தும் கைகளால் அடித்தும் பின்னோக்கி செல்ல செய்தனர்.

  இதை அறிந்த திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் வாகனத்தின் மீது ஏறியபடி அந்த வழியாக பிரச்சார வழிவிட  சொன்னனர். இதனால் இருத்தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அவர்களுக்குள் தாக்கி கொள்ளும் சூழல் ஏற்பட்டது.

  மேலும் திமுக கூட்டணி கட்சியினரின் இருச்சக்கர பிரச்சார வாகனங்களை கீழே தள்ளி விட்டு ரகளையில் ஈடுப்பட்டனர். அப்போது பிரச்சார  வாகனத்தில் மேலே சீமான்றினார். இதனை பார்த்த அவரது தொண்டர்கள் கோஷமிட்டனர்.

  இதனால் அங்கு தள்ளுமுள்ளு  முற்றவே அங்கிருந்த துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர்  பேச்சுவார்த்தை நடத்தி வை.செல்வராஜ் வாகனத்தை அதே வழியாக அனுப்பி வைத்தனர்.

  இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் கண்டன முழக்கமிட்டனர். திமுக கூட்டணி கட்சியினர் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு முழக்கமிட்டு செல்ல, அதற்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியினர் 200 ரூபாயை காட்டியும் நாம் தமிழர் கட்சி வாழ்க எனவும் நமது சின்னம் மைக் சின்னம் பதிலுக்கு சத்தம் போட்டனர்.

  ஒருப்பக்கம் சீமான் பிரச்சார வாகனத்தில் அமைதியாக நிற்க நாம் தமிழர் கட்சியினரும், வேட்பாளர் கார்த்திகாவும் எதிர் முழக்கம் எழுப்பியபடியே இருந்தனர்.  தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரச்சார வாகனம் கடந்து சென்ற பிறகு மைக்கில் பேசிய சீமான், காவல்துறையினர் வேண்டுமென்றே பிரச்சனை தூண்டுவதற்காக இப்பகுதியில் பிரச்சார வாகனத்தை அனுமதித்து உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

 நாகப்பட்டினத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் வாகனத்தை விடாமல் வழி மறித்து நாம் தமிழர் கட்சியினர்   ரகளையில் ஈடுபட்டதால்  அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.