மீண்டும்... மீண்டும் வேட்புமனுதாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி காளியம்மாள்! தேர்தல் நடத்தை விதியை மீறிய காங்..எம்.பி!

மீண்டும்... மீண்டும் வேட்புமனுதாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி காளியம்மாள்! தேர்தல் நடத்தை விதியை மீறிய காங்..எம்.பி!

க.பாலகுரு,

 தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இருக்கவே கூடாது என பாஜக திமுக இணைந்து நெருக்கடி கொடுத்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கூடுதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதாக மயிலாடுதுறை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் இரண்டாவது வேட்பு மனுவை தாக்கல் செய்து பேட்டி;-

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டாவது முறை வேட்புமனு தாக்கல் செய்து, மாற்று வேட்பாளராக அவரது சகோதரி சுருதியையும் வேட்பு மனுதாக்கல் செய்ய வைத்தார். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள் என்பவர் போட்டியிடுகிறார். ஏற்கனவே¢ நேற்று மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

 இந்நிலையில் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் இன்று இரண்டாவது முறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவிற்கான பணத்தை கட்டி மாவட்ட ஆட்சியர் முன்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

 ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம் என்ற விதியின் அடிப்படையில் ஏதாவது காரணத்திற்காக ஒரு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் மற்றொரு வேட்பு மனு மூலம் தேர்தலில் போட்டியிடலாம் என்ற வியூகத்தின் அடிப்படையில் இரண்டாவதாக வேட்புமனுதாக்கல் செய்துள்ளார்.

 மாற்று வேட்பாளராக அவரது சகோதரி சுருதியும் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

 தொடாந்து செய்தியாளர்களிடம் பேசிய நாம்'தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் கூறுகையில், மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் போட்டியிட முதல் கட்டமாக ஏற்கனவே மனு தாக்கல் செய்தேன். மீண்டும் இரண்டாவது கட்டமாக மனு தாக்கல் செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். ஏனெனில் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியை ஒரு பெரிய நெருக்கடிக்கு தள்ளும் வகையில் பாஜக, திமுகவினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

  தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இருக்கவே கூடாது என ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லியது போல, ஒரு பெரிய திட்டம் தீட்டி நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருக்கின்றனர். இவர்கள், எங்கள் வேட்பு மனுவை நிராகரிக்க எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் மனுக்களை தாக்கல் செய்கிறோம் என்றார்.

தேர்தல் நடத்தை விதியை மிறீய காங்கிரஸ் எம்பி,

 மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர் சுதா இருசக்கர வாகனத்தில் கூட்டணிக் கட்சயினருடன் பேரணியாக  வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.. வேட்பாளருடன் ஆறு பேர் உள்ளே சென்றதால் பரபரப்பு. மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியும் அறையை விட்டு வெளியேறாமல் வேட்புமனு தாக்கல் செய்யும் அறையிலேயே அமர்ந்து தேர்தல் விதிமுறையை மீறிய மயிலாடுதுறை எம்பி மற்றும் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது.

  மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி வேட்பாளருடன் நான்கு பேர் மட்டும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய போதும்,மயிலாடுதுறை எம்.பி.ராமலிங்கம், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லோகநாதன் ஆகியோர் அங்கேயே அமர்ந்தனர்.

  மக்கள் பிரதிநிதியே தேர்தல் விதிமுறையை மீறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் சுதா வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக ஆடுதுறையைச் சேர்ந்த பிரதாபன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.