மாவட்ட பொறுப்பாளரின் அடாவடியால் ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர்! நெடுஞ்சாலையில் மதுபான கடையா? மக்கள் கொதிப்பு!
ஜி.குலசேகரன்,
வாணியம்பாடி அருகே கிராம மக்கள் எதிர்ப்பை மீறி இரவோடு இரவாக திறக்கப்பட்ட அரசு மதுபான கடையை அகற்ற கோரி முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளில் இரவோடு இரவாக திறக்கப்பட்ட மதுபான கடையை அகற்ற வேண்டும் எனவும் எங்கள் பகுதி மக்களுக்கு இந்த அரசு கொடுத்த பரிசா ?.என கேள்வி எழுப்பும் மக்கள் வரும் தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி சர்வீஸ் சாலையோரம் குடியிருப்புகள்தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு சாலையோரம் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

அதிலும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் உள்ள பகுதியில் இரவோடு இரவாக அவை திறக்கப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்த மக்கள் அங்கு குழுமியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு இன்ஸ்பெக்டர் பேபி அவர்களின் தலைமையில் வந்த கிராமிய போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கூட்டத்தினர் கலைந்தனர்.
இது குறித்து விசாரித்த போது மாவட்ட அளவில் பொருப்பாளராக உள்ள ஒருவரின் ஏற்பாட்டின் பேரில் தான் நெடுஞ்சாலை ஓரம் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதாக கூறப்பட்டது.
மாவட்ட பொருப்பாளர் செய்த தவறுக்கு ஆட்சியாளர்களை மக்கள் குறை சொன்னது வேதனைதான். உளவுத்துறை நோட் போடுமா?

admin
