விவசாயிகளை கஷ்டப்படுத்தும் காட்டுப்பன்றிகள்!

விவசாயிகளை கஷ்டப்படுத்தும் காட்டுப்பன்றிகள்!

கு.அசோக்,

 குடியாத்தம் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்களை 30 மேற்பட்ட பன்றிகள் மிதித்து சேதம் - கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் வேதனை - வனத்துறையினர் விசாரணை.

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அனுப்பு கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வரும் நிலையில்  காட்டுப் பன்றிகள் பயிற்களை சேதப்படுத்தி வருகின்றன.

 வனப்பகுதியை  ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் உஷா மற்றும் முனுசாமி ஆகியோர் நெல் பயிரிட்டு அறுவடைக்கு சில தினங்களில் இருக்கும் நிலையில்,  அந்த¢ நிலத்தில் புகுந்த சுமார் 30க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள்  பயிற்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளன.

 இதனால்  சுமார் இரண்டு ஏக்கரின் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை அழித்துவிட்டன. தொடர்ந்து இந்த பகுதியில் விவசாய நிலங்களை காட்டுப்பன்றி யானை மான் உள்ளிட்ட  வனவிலங்குகளால் சேதப்படுத்தி வருவதால்,விவசாயம் ஷ் கடன் கடன் வாங்கி விவசாயம் செய்து தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் குடியாத்தம் வனத்துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.