பைக்கில் வீலிங் செய்த ஸ்டைல் இளைஞர்! கல்லூரி மாணவிகளால் கம்பி எண்ணுகிறார்!
க.பாலகுரு,
ஸ்டைல் இளைஞர் ஒருவர்,¢ இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யும்போது எதிரே வந்த கல்லூரி மாணவிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய்யப்பட்ட நிலையில், இளைஞரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை.
திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் இருந்து வெள்ளக்குடி செல்லும் சாலையில் கங்களாஞ்சேரியை சேர்ந்த கருணாநிதி என்பவரது மகள் ஆர்த்தி 20, அவரது தங்கை அர்ச்சனா 19 ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த புலிவலம் பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவரது மகன் காதர் மைதீன் 19 இருசக்கர வாகனத்தில் ஸ்டைலாக வந்து முன் வீல் தூக்கியபடி வீலிங் செய்தார். அப்போது பைக் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஆர்த்தி தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஆர்த்தி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, காதர் மைதீன் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல்துறையினர் அவரை நாகப்பட்டினம் கிளை சிறையில் அடைத்தனர்.

admin
