இவர் தான் நெம்பர் ஒன்..... லாட்டரி அதிபர் மார்ட்டின் ரூ.1368 கோடி நிதி அளித்துள்ளார்! தேர்தல் ஆணைய இணையத்தில் தகவல்!
ம.பா.கெஜராஜ்,
லாட்டரி அதிபர் மார்ட்டின், தேர்தல் நன்கொடையாக கோடி ரூபாய் அளித்திருக்கிறார் என்கிற தகவலை தேர்தல் ஆணையம் தமது இணையத்தில் வெ.ளியிட்டிருக்கிறது. அதே போல் முத்தூட் பைனான்ஸ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பணம் வழங்கிய விவரங்களும் அதில் வெளியாகியிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் நிதிப் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று இரவு வெளியிட்டது.
தேர்தல் நிதிப்பத்திரங்கள் குறித்த வழக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் " தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாங்கியவர்கள், அதன் மூலம் நிதி பெற்ற அரசியல் கட்சிகள், பத்திரங்கள் விவரம், ஆகியவற்றை 2019ஏப்ரல் முதல் 2024 ஜனவரி அனைத்து விவரங்களையும் மார்ச் 6ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மார்ச் 13ம் தேதி தேர்தல் ஆணையம் அந்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்" என தீர்ப்பளித்தது.
இந்நிலையில், காலக்கெடு முடிய இருநாட்கள் இருக்கும் நிலையில் கடந்த 4ம் தேதி எஸ்பிஐ வங்கி, உச்ச நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் "எஸ்பிஐ வங்கி காலஅவகாசம் கேட்ட மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி வழங்க 24 மணிநேரம் அவகாசம் தருகிறோம். 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ம் தேதிவரை தேர்தல் நிதிப்பத்திரங்களை யார் வாங்கியது, வாங்கியவர்கள் பெயர்கள், நிதிப் பத்திரங்களின் மதிப்பு, அந்த பத்திரங்களை எந்தெந்த அரசியல் கட்சிகள் வங்கியில் கொடுத்து பணமாக மாற்றின?
அவை எந்தெந்த தேதியில் பணமாக மாற்றப்பட்டது, தேர்தல் பத்திரங்களின் மதிப்பு ஆகிய விவரங்களை வழங்கிட வேண்டும். மார்ச் 12ம் தேதி வேலை நேரத்துக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும் எஸ்பிஐ வங்கி வழங்கிட வேண்டும். மார்ச் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்" எனத் தீர்ப்பளித்தது
இந்நிலையில் தான் நேற்று இரவு இணையத்தில் இந்த விவகாரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதில் லாட்டரி அதிபர் மாட்டினின் நிறுவனமான பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது.
இதே காலகட்டத்தில் அமலாக்க துறையின் வழக்கு விசாரணை வளையத்திற்குள் இருந்தார் லாட்ரி மாட்டின்.
அவருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்திருந்தது.
எஸ்பிஐ வங்கி சார்பில் கடந்த 2019ம் ஆண்டிலிருந்து 2024ம் ஆண்டுவரை வழங்கப்பட்ட தேர்தல் நிதிப்பத்திரங்கள் 2 பிரிவுகளாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
முதல் பகுதியில் 360க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாகவும், 2வது பகுதி 426 பக்கங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த தேர்தல் நிதிப் பத்திரங்களில் எந்தெந்த நிறுவனங்கள் தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கின, எவ்வளவு தொகைக்கு வாங்கின என்பது மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நிறுவனங்கள் சார்பில் எந்தக் கட்சிகளுக்கு தேர்தல் நிதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன என்பது குறித்தவிவரம் இல்லை. ஆனால், அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப்பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த ஆண்டுகளில் எவ்வளவு பணமாக மாற்றிய விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முதல்பகுதியில் 2019 ஏப்ரல்1ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 15ம் தேதி வரை 22,217 தேர்தல் நிதிப்பத்திரங்களை எஸ்பிஐ வங்கியிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் தரப்பட்டுள்ளன.
2வது பகுதியில், தேர்தல் பத்திரங்களை பணமாக்கிய அரசியல் கட்சிகளின் பெயர்கள், அவர்கள் பணமாக்கிய தொகை தரப்பட்டுள்ளது. 2019, ஏப்ரல்1 முதல் 2024 பிப்ரவரி வரை 22,030 பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் பணமாக்கியுள்ளன.
பா.ஜ. க அதிகபட்சமாக 6060 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது எனவும், காங்கிரஸ் கட்சி 1,421ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. திமுக 639 கோடி ரூபாயும், அதிமுக 6 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன.
1.பியூட்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் பிஆர் (Future Gaming and Hotel Services PR)- ரூ. 1368 கோடி.
2. மேகா இன்ஜினீயரிங் அண்டு இன்ஃப்ராஸ்ட்ரச்சர்ஸ்லிட் (Megha Engineering & Infrastructures Ltd)- ரூ. 966 கோடி.
3. குவிக் சப்ளை செயின் பிரைவேட் லிட் (Qwik Supply Chain Pvt Ltd)- ரூ. 410 கோடி.
4. வேதாந்தா லிட் (Vedanta Ltd)- ரூ. 400 கோடி.
5. ஹல்தியா எனர்ஜி லிட் (Haldia Energy Ltd)- ரூ. 377 கோடி.
6. பாரதி குரூப் (Bharti Group)- ரூ. 247 கோடி.
7. எஸ்சல் மைனிங் அண்டு இன்ஸ்ட்ரீஸ் லிட் (Essel Mining & Industries Ltd)- ரூ. 224 கோடி.
8. வெஸ்டர்ன் யூபி பவர் டிரான்ஸ்மிசன் கம்பேனி லிட் (Western UP Power Transmission Company Ltd)- ரூ. 220 கோடி.
9. கேவேந்தர் ஃபுட்பார்க் இன்ஃப்ரா லிட் (Keventer Foodpark Infra Ltd) - ரூ. 195 கோடி.
10. மதன்லால் லிட் (Madanlal Ltd)- ரூ. 185 கோடி. 10. மதன்லால் லிட் (Madanlal Ltd)- ரூ. 185 கோடி.
பா.ஜ. க அதிகபட்சமாக 6060 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது எனவும், காங்கிரஸ் கட்சி 1,421ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது. திமுக 639 கோடி ரூபாயும், அதிமுக 6 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றுள்ளன.

admin
