இளம்பெண்களை ஏமாற்றி இன்பம் அனுபவித்து சிறை சென்றவர் பாஜகவா? இல்லையா?
ஜி.சாந்தகுமார்,
இளம்பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வழக்கில் கைதாகியிருப்பவர் பாஜக பிரமுகரா இல்லையா என்று பட்டி மன்றம் ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னையை அடுத்த சேலையூர் அடுத்த செம்பாக்கம், திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் லியாஸ் தமிழரசன் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருவதுடன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளராகவும் உள்ளார் என்று கூறப்படுகிறது.
அப்படியிருக்க கடந்த 2018ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் படித்த பெண் ஒருவரிடம் பழகி காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி அந்தப் பெண்ணை தனது பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணிடம் இருந்து சுமார் 20 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகை பெற்று மோசடி செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் லியாஸ் தமிழரசன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் ஒரு கட்டத்தில் அந்த பெண் லியாஸ் தமிழரசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது, திருமணம் செய்துகொள்ள முடியாது என மறுத்ததோடு, லியாஸ் தமிழரசன் அவருடன் உல்லாசமாக இருந்தபோது அந்த பெண்ணுக்கு தெரியாமல் எடுத்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டலும் விடுத்துள்ளார்.
இந்நிலையில் அந்த பெண் லியாஸ் தமிழரசனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதனை செய்ததில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அந்த பெண்களிடமும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றியதும் தெரிந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் லியாஸ் தமிழரசனை கைது செய்தனர்.
விசாரணையில், லியாஸ் தமிழரசன் பல பெண்களை ஏமாற்றி பணம் மற்றும் நகை பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. எனவே, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அப்படியிருக்க இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. லியாஸ் தமிழரசன் பயன்படுத்திய டேப்லெட்டை போலீசார் சோதனை செய்து பார்த்ததில் அதில் லியாஸ் தமிழரசன் 10க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த அந்தரங்க வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நியாஸ் தமிழரசன் பாஜக வில் எந்த பொறுப்பிலும் இல்லை என செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் ரகுராமன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதில், 10.2.2025 திங்கட்கிழமை அன்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், சென்னை, செம்பாக்கம் பகுதியை சேர்ந்த லியாஸ் தமிழரசன் (25) என்பவர் பெண்களை ஏமாற்றி மிரட்டல் விடுத்ததாகவும் அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பாரதிய ஜனதா இளைஞரணியை சார்ந்தவர் என்று தவறான தகவல் வெளிவந்துள்ளதை அறிந்தேன்.
அவர் பாரதிய ஜனதா இளைஞரணியை சார்ந்தவர் இல்லை என்பதும், அவர் எங்கள் அதிகாரப்பூர்வ எந்த பதிவேடுகளிலும் அவர் பெயர் இல்லை என்பதும் அவர் அடிப்படை உறுப்பினராகவும் இல்லை என்பதை இதன் மூலம் மறுப்பு தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தந்தை ஆர்.ஏழுமலை செம்பாக்கம் பகுதி திமுக நிர்வாகி என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் பாஜக வின் பல தலைவர்களுடன் குற்றம்சாட்டப்பட்ட நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதே போல் சுதந்திர தின வாழ்த்துக்காக பாஜக சார்பில் வைக்கப்பட்ட ன்ளக்ஸ் பேனரிலும் அவரது படம் உள்ளது.

admin
