செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பா?

செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பா?

ம.பா.கெஜராஜ்,

 தலைமையுடன் சற்று ஒதுங்கியே காணப்படுகிறார் செங்கோட்டையன். அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சில பல தகவல்கள் வெளியாகிவருகின்றன.

 அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவராகவும், கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகவும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இருந்து வருகிறார்.

 இவர்  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவுடன் அதிக நெருக்கம் காட்டி வந்தார். அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்பதில் இவர் ஆர்வம் காட்டினார்.

 ஆனாலும் கூட மூத்தவரான செங்கோட்டையனை, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி மதிப்பதில்லை எனவும், நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையனின் பரிந்துரைகள் ஏற்கப்படுவதில்லை எனவும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

  அப்படியிருக்க கடந்த பிப்.9-ம் தேதி கோவையில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக விவசாய அமைப்புகள் சார்பில் பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கான அழைப்பிதழ், பேனர்களில் மூத்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை எனக்கூறி அவ்விழாவில் பங்கேற்பதை செங்கோட்டையன் தவிர்த்தார்.

 அதனைத்தொடர்ந்து  செங்கோட்டையன், பழனிசாமியுடன் பாராமுகமாக இருந்து வருகிறார். அவருடனான சந்திப்பை தவிர்த்து வருகிறார். சட்டப்பேரவைக்கு வந்தாலும், அதற்கு முன்பாக நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தார். வழக்கமாக பழனிசாமி உள்ளிட்டோர் வரும் நுழைவுவாயிலையும் தவிர்த்தார்.

 இது ஒரு புறம் இருக்க, பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என கூறிவந்த எடப்பாடி பழனிசாமி, திடீர் பயணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். உடனே, தமிழகத்தில் 2026 தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித் ஷா, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

   இந்நிலையில் கடந்த 28-ம் தேதி செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல்கள் வெளியானது.

 அதில் அதிமுக கூட்டணிக்கு வராவிட்டால், செங்கோட்டையனை வைத்து கட்சியில் பிளவை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

   இதனால் செங்கோட்டையனுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  திட்டம்......!