முன்னாள் அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு! இரட்டை இலையை காட்டி பிரச்சாரம்!

முன்னாள் அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு! இரட்டை இலையை காட்டி பிரச்சாரம்!

க.பாலகுரு,

 நாகை நாடாளுமன்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியின் வேட்பாளராக டாக்டர் சுஜித் சங்கர் போட்டியிடுகிறார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 அதனைத் தொடர்ந்து திருவாரூர் ஒன்றிய பகுதிகளான விளமல் கீழக்காவாது குடி, பழைய வலம், வைப்பூர், நடப்பூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தனர்.

 இதில் அஇஅதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்களர்களை சந்தித்தனர்.

 இந்த நிகழ்வில் தண்டலை ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன், அதிமுக திருவாரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்வேலன், நகரச் செயலாளர் மூர்த்தி, தண்டலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலெட்சுமி செல்வம், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.