திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்! விஜய் அறிவிப்பு? இது போலி என்று புஸ்ஸிஆனந்த் அறிக்கை

திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்! விஜய் அறிவிப்பு? இது போலி என்று புஸ்ஸிஆனந்த் அறிக்கை

ஜி.சாந்தகுமார்,

  நடிகர் விஜய் "தமிழக வெற்றிக் கழகம்" என்கிற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். வரும் 19 ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறவிருக்கிறது. ஆனால் அவரோ 2026 தேர்தலிதான் களம் காணுவேன் என்று அறிவித்துள்ளார்.

  அப்படின்னா... இந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜய்-யின் 50 லட்சம் உறுப்பினர்கள், தொண்டர்கள் எந்த கட்சிக்கு சார் ஓட்டளிக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி இருந்து வந்தது.

  அதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியிருக்கிறது.

அதில் 100 சதவிகிதம் வாக்களிக்கவேண்டும், தமிழகத்தின் வளர்ச்சியை மட்டும் பாராமல் ஒட்டு மொத்த தேசத்தையும் வளர்ச்சியையும் யார் கருத்தில் கொண்டு செயல்படுவார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். "திராவிட பிரிவினைவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்". இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அறிக்கையை விஜய் வெளியிடவில்லை என்றும் தமிழக வெற்றி கழகத்துக்கும் இந்த அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார்.