அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ரத்து! டிடிவி தினகரன் ஏமாற்றம்!
ம.பா.கெஜராஜ்,
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தேனி நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சாரம் செய்ய வரவிருந்த நிலையில் திடீரென்று அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவருக்கு வாக்கு சேகரிக்கும் பொருட்டு 04.04. 2024 அன்று தேனிக்கு அமித்ஷா வரவிருந்தார்.
அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது அதேபோல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வழிபடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பணி காரணமாக வர முடியவில்லை என்று அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டு விட்டது.
இதனால் டிடிவி தினகரன் ஏமாற்றம் அடைந்தார்.

admin
