'என்னை அழைக்க வேண்டாம்': போதை பொருள் வழக்கில் ஆஜரான அமீர் வாட்ஸாப் ஸ்டேட்டஸ்!
ம.பா.கெஜராஜ்,
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக கைதாகியிருக்கும் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய நண்பர் என கூறப்படும் இயக்குநர் அமீரை விசாரிக்க வேண்டுமென என்சிபி சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படையில் டெல்லிக்கு சென்ற அமீர் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜரானார். அப்போது அவரிடம் என்சிபி போலீஸார் 12 மணி நேரத்துக்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் அமீர் வெளியே வந்தவுடன், விசாரணை குறித்து அறிய செய்தியாளர்கள் பலர் அவரது கைப்பேசிக்கு தொடர்பு கொண்டனர். அவர் அழைப்புகளை ஏற்காமல் வாட்ஸாப் ஸ்டேட்டஸ் பதிவு மூலம் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். 2-3 நாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை யாரும் என்னை அழைக்க வேண்டாம். அன்புடன் அமீர் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேவைப்பட்டால், விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமீரை அனுப்பிவைத்ததாகவும், அதற்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என தெரிவித்ததாக கூறப்படுகிறது அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் டெல்லி என்சிபி போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வார்கள் என்று தெரிகிறது.
மேலும் அமீர் என்ன சொன்னார் என்பதை அறிந்துகொள்ள சில விவிஐ கள் முயற்சிப்பதாகவும் தகவல்.

admin
