எவருமே போகாத மலைக்கிராமத்துக்கு நேரில் சென்று வாக்கு சேகரித்த அ.தி.மு.க.வேட்பாளர் பசுபதி!

எவருமே போகாத மலைக்கிராமத்துக்கு நேரில் சென்று வாக்கு சேகரித்த அ.தி.மு.க.வேட்பாளர் பசுபதி!

 ஜி.கே.சேகரன்,

 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.

 இந்த தொகுதியில் அதிமுக சார்பில் மருத்துவர் எஸ்.பசுபதி, இரட்டை இலை சின்னத்திலும்,திமுக சார்பில் கதிர் ஆனந்த் உதயசூரியன் சின்னத்திலும், பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம், தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.  நாம் தமிழர் கட்சியில் மகேஷ் ஆனந்த் என்பவர் போட்டியிடுகிறார்.

 இருந்த போதும், அதிமுக திமுக பாஜக வேட்பாளர்களே களத்தில் இறங்கி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக வேட்பாளர் எஸ்.பசுபதி,

 வாக்கு சேகரிக்க இதுவரை எவருமே செல்லாத பழங்குடியினர் வசிக்கும் மலைகிராமத்துக்கு அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி  நேரில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

  வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்துக்கு தார் சாலை மற்றும் குடிநீர் வசதியை செய்து தர நடவடிக்கை எடுப்பேன் என்று அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி வாக்குறுதி அளித்து மலைவாழ் மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

 தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத்குமார் தலைமை வகித்தார். வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார். முதல் முறைறயாக நெக்னாமலை பகுதிக்கு மக்களவைத் வேட்பாளர் ஒருவர் தங்களது மலை கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க வருவதையறிந்து வேட்பாளருக்கு மலைகிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  தொடர்ந்து அங்குள்ள காளியம்மன் கோயிலில் சிறறப்பு பூஜை நடத்தினர். பிறகு மலை கிராம மக்களைச் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

  பிரசாரத்தின் போது வெற்றி பெற்றறவுடன் மலை கிராமத்திற்கு உடனடியாக தார் சாலை அமைக்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் குடிநீர் பிரச்னை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என வேட்பாளர் எஸ்.பசுபதி வாக்குறுதி அளித்தார்.

  நிகழ்ச்சியில் ஆலங்காயம் பேரூராட்சி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் ஊராட்சி செயலாளர் சரவணன், வார்டு உறுப்பினர் திருப்பதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவிந்தன், ஆலங்காயம் மேற்கு ஒன்றியத் துணைச் செயலாளர் பாரதிதாசன், நெக்னாமலை முனிசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்,

 வேலூர்மாவட்டம், அணைக்கட்டு அருகேயுள்ள பொய்கை கிராமத்தில் இந்தியா கூட்டணி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குகளை சேகரித்தார். அவருடன் அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பாபு, குமாரபாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனார்.

  கதிர்ஆனந்த் பேசுகையில் சமையல் எரிவாயும் விலை அத்தியாவசிய பொருட்களின் விலையும் மத்திய பாஜக ஆட்சியில் கடுமையாக உயர்ந்துள்ளது இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி கடுமையாக உயரும். திமுக கொண்டு வரும் மக்கள் நலன் திட்டங்களான காலையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு மகளிர் உரிமை தொகை மாணவர்கள் உதவித்தொகை அனைத்தையும் பாஜக அரசு மீண்டும் வென்றால் நிறுத்திவிடுவார்கள். கேஸ் விலையை 2000 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவிடுவார்கள், எனவே பாஜகவுக்கு வாக்களிக்காமல் தனக்கு வாக்களியுங்கள் என பேசினார்.

பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்,

பாஜக வேட்பாளரும் புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏ.சி.சண்முகம், வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள ஓலைக்கண் விநாயகர் ஆலயத்தில் வழிபாடு செய்த பின்னர் பிரச்சாரத்தை தொடங்கினார்.ஸ்  அப்போது அவர் நிச்சயம் 400 தொகுதிகளுக்கு மேல் வென்று மீண்டும் பாரத பிரதமராக மோடி ஆட்சியில் அமர்வார்.

தமிழகத்திலும் 25 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் நாங்கள் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என பேசினார்.

அப்போது அவருடன் பாமக மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம் மற்றும் பாஜக மாவட்டத்தலைவர் மனோகரன் மற்றும் அமமுக,தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் உடன் இருந்தனர் இதே போன்று ரங்காபுரம்,பெருமுகை,சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளிலும் அவர் தீவிரமாக வாக்குகளை சேகரித்தார்.