தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரரை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!
கு.அசோக்,
சோளிங்கர் பகுதியில் தரமற்ற சாலை அமைத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்தாரை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கிராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஜார் தெருவில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்த நிலையில் அதனை புதுப்பிக்கும் வகையில் சுமார் 20 லட்ச ரூபாய்க்கு மேல் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆனது கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்நிலையில் போடப்பட்ட சிமெண்ட் சாலை தரமற்ற முறையில் இருப்பதாகவும், மேலும் தூசியல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருவதாக கூறி பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் தொகுதி தேர்தல் மேற்பார்வையாளர் சுதா பார்த்திபன் கலந்து கொண்டு வரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மற்றும் நகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சீனிவாசன், பிறமொழி பிரிவு மாநில செயலாளர் சீனிவாசலு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

admin
