100 ரூபாய் பட்டுவாடா செய்து சிக்கலில் மாட்டிய தேனி அதிமுக வேட்பாளர்!

100 ரூபாய் பட்டுவாடா செய்து சிக்கலில் மாட்டிய தேனி அதிமுக வேட்பாளர்!

Ma.ba.Gajaraj,

அதிமுக வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு பண பட்டுவாடா நடைபெற்று இருக்கிறது.

தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணசாமி என்பவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்தப் பிரச்சாரத்தை கலை கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த அதிமுக நிர்வாகிகள், அதற்கென செயற்கையாக கூட்டத்தை சேர்த்தார்கள்.

பின்னல் ஒரு வழியாக பிரச்சாரம் முடிந்த உடன் அழைத்து வரப்பட்டவர்களுக்கு தல நூறு ரூபாவை அதிமுக நிர்வாகி ஒருவர் பட்டுவாடா செய்தார்.

இது தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த தொகுதியில் சர்ச்சை எழுந்திருக்கிறது.

இந்த தொகுதியில் திமுக சார்பாக தங்கம் தமிழ்ச்செல்வம், பாஜக கூட்டணி சார்பாக டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.