மாணாக்களை வழியனுப்பி வைத்த கலெக்டர்!
ஜி.குலசேகரன்,
கரூரில் நடக்கவுள்ள மாநில அளவிலான கலைத்திருவிழாவில் பங்கேற்க வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 66 மாணவ,மாணவிகளை பேருந்துகள் மூலம் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி அனுப்பி வைத்தார்.
கரூரில் இன்று நடக்கவுள்ள மாநில அளவிலான கலைத்திருவிழாவில் பங்கேற்க 2 பேருந்துகளின் மூலம் மொத்தம் 66 மாணவ,மாணவிகளை மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி பேருந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்து அனுப்பினார்
இதில் 1 ஆம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் 66 மாணவ,மாணவிகள் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்துகொள்ள சென்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜோதீஸ்வர பிள்ளை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

admin
