கணவன் மனைவி சுடுகாட்டில் சாவு!கொலையா? தற்கொலையா?!
கு.அசோக்,
சோளிங்கர் அருகே இடுகாட்டில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த நீலகண்டராயபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜா/45 மற்றும் மனைவி சுகன்யா/40 ஆகிய இருவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
ராஜாவின் மனைவி சுகன்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னணியில் குடும்ப சூழல் காரணமாக மன உளைச்சலில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வாலாஜா சோளிங்கர் செல்லும் சாலையில் நீலகண்ட ராயபுரம் பகுதியில் உள்ள இடுகாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக சோளிங்கர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் சடலங்களை மீட்டு வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சோளிங்கர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது கொலையா தற்கொலையா என உறவினர்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

admin
