காவலர் வீரவணக்க நாள்!டிஜிபி மலர் வளையம் வைத்து மரியாதை!  முதல்வர் அளித்த சர்ப்ரைஸ்! 

காவலர் வீரவணக்க நாள்!டிஜிபி மலர் வளையம் வைத்து மரியாதை!  முதல்வர் அளித்த சர்ப்ரைஸ்! 

ம.பா.கெஜராஜ்,

காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறையில் பணியிலிருந்த போது மரணம் அடைந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தை சேர்ந்த 110 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கும், 65 நபர்களுக்கு தகவல் பதிவு உதவியாளர் /வரவேற்பாளர்  பணியிடத்திற்கும் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை, வழங்குவதின் அடையாளமாக 20 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் காவலர் வீரவணக்க நாளை ஒட்டி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன்

காவலர் வீரவணக்க நாளை கடைபிடித்தார்.

 அதே போல்,  இராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமையகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

   அதன்படி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று (21.10.2025) காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவல் துறையில் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி,அய்மன் ஜமால், இ.கா.ப., அவர்கள் தலைமையில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி பின் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.வீரவணக்கம் நாளை முன்னிட்டு போலீசார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  உடன் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடகிருஷ்ணன், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

  கடந்த 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் 'ஹாட் ஸ்பிரிங்ஸ்' என்னுமிடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.