பனை மரங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்!

பனை மரங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்!

கு.அசோக்,

 மலைகளுக்கு தீ வைத்த கும்பல் தொடர்ச்சியாக ஏரி கரையில் உள்ள பனை மரங்களுக்கு தீ வைத்து அட்டகாசம், வனத்துறையும், தீ தடுப்புத் துறையும் தூங்குகின்றதா பொதுமக்கள் கேள்வி.

  வேலூர் மாவட்டம் வேலூர் - பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் பொய்கை மோட்டூர் பகுதியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அண்பூண்டி ஏரி மற்றும் நீர் தேக்கம் அமைந்து உள்ளது. 

  இந்த ஏரி கரையை பலப்படுத்தி சென்ற 10 ஆண்டுகளாக அரசு எந்திரம் பனை மரங்களை நட்டு ஏரி தடுப்புகளில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுத்து வந்துள்ளனர்.

   அரசாங்கத்தின் சீரிய முயற்ச்சியால் கரை முழுவதும் பல்வேறு மரங்கள் செழித்து வளர்ந்து உள்ளது.

  குறிப்பாக பனை மரங்கள் செழிப்பாக வளர்ந்து வந்த வேலையில் இன்று மாலை நுங்கு வேட்டையாளர்கள் நுங்கை அறுத்துக் கொண்டு அங்கு உள்ள 200 -க்கும் மேற்ப்பட்ட மரங்களுக்கு தீ வைத்து சென்று உள்ளனர்.

  இதில் ஏரி கரையில் உள்ள அனைத்து மரங்களும் தீயில் கருகும் அபாயம் ஏற்ப்பட்டு உள்ளது. இது குறித்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீயை எப்படி அனைப்பது என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

 ஏரிக்கரைக்கு தீ அணைப்பு வாகனங்கள் செல்வது மிகவும் சிரமம் என்பது குறிப்பிடத்தக்கது. பனை மரம் உச்சி முதல் வேர் வரை மனிதர்களுக்கு பயன் தருவதால்,எரிந்து வரும் பணை மரங்களை பாதுகாக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துவுள்ளனர்.