பெரம்பூர் வீடுகளில் விசில் கோலம்! விஜய் சர்ப்ரைஸ் விசிட்!

பெரம்பூர் வீடுகளில் விசில் கோலம்! விஜய் சர்ப்ரைஸ் விசிட்!

க.முகில்,

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

 ஏற்கனவே அவர், குமரி, திருப்பூர், சென்னை, திருச்சி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  2026 தேர்தல் என்பது திமுக, அதிமுக மட்டுமல்ல, விஜய்யின் தவெகவுக்கும் முக்கியமான தேர்தல் என்பதால் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.

   இன்று எந்த ஒரு பெரிய முன்னறிவிப்பும் இல்லாமல் தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்துள்ளார்.

  தவெக தேர்தல் அலுவலகத்துக்கு சென்ற நிலையில், அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரித்துள்ளார். பின்னர், அப்பகுதி மக்களைச் சந்தித்து அவர்கள் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார்.

 மேலும், பெரம்பூரில் உள்ள அலுவலகத்தில் தொகுதி வளர்ச்சி குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடினார். பெரம்பூர் தொகுதிக்கான தவெக தேர்தல் அலுவலகத்தில் விசில் சின்னத்தை கோலமிட்டார்.