தீ விபத்தா? இப்படித்தான் செயல்பட வேண்டும்! தேனி நீதிமன்றத்தில் பரபர!
எம்.எ.கண்ணன்,
தீ பற்றி எறிந்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேனியில் நீதிமன்ற பணியாளர்களுக்கு
செயல்முறை விளக்கத்தை தீயணைப்புத் துறையினர் அளித்தனர்.
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில் உள்ளது.
இந்த நீதிமன்ற வளாகத்தில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் தீயணைப்புத் துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது.

நீதிமன்ற பணியாளர்களுக்கு தீ தடுப்பு மற்றும் தற்காலிக பேரிடர் காலங்களில் செயல்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும்,தீ பற்றி எரிந்தால் எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்தும், தீ பற்றி எரியும் கட்டுமானங்களில் இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.
இதில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

admin
