இந்தியில் ஓட்டு கேட்டு நோட்டீஸ் கொடுக்கும் திமுக!
ப.சீனு,
வரும் 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு வாக்களிக்குமாறு, திமுகவினர் இந்தி மொழியில்நோட்டீஸ் விநியோகம் செய்துள்ளனர்.
அந்த நோட்டீஸில், திமுக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர் படங்களுடன், உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று இந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகுதியில் பிப். 5-ம் தேதிவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக-நாம் தமிழர் கட்சிக்கிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஈரோடு கோட்டை பகுதியில் வடமாநிலங்களைச் சேர்ந்தோர் அதிகம் வசித்து வருகின்றனர்.அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ள திமுகவினர், இந்தியில் அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கைகளை விநியோகம் செய்து, வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திமுகவின் இந்தி துண்டறிக்கையை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர், 'திமுகவின் மொழிப்பற்று இதுதானா?' என விமர்சனம் செய்துள்ளனர்.

admin
