எங்களை கண்டுகொள்ளுங்கள்!

எங்களை கண்டுகொள்ளுங்கள்!

ஜி.கே.சேகரன்,

எஸ். பி. ஐ முன்பு நமது தேசம் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு நமது தேச கட்சி நிறுவனத் தலைவர் லட்சுமிபதி தலைமையில் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க கோரி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

 அதேபோல உள் இடஒதுக்கீடு 6% உயர்த்தி வழங்கிடவும் மேலும் 3 சதவீதம் உள் ஒதுக்கிட்டை பாதுகாத்திட வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது.     அதில் முக்கிய கோரிக்கைகளாக கோவில் மானிய நிலங்களை அருந்ததியர்  மக்களுக்கு விவசாயம் செய்ய குந்தகை கொடுக்க வேண்டும்.

  சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் அருந்ததியர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அருந்ததியர் மக்கள் வசிக்கின்ற வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அருந்தியதியர் இட ஒதுக்கீட்டின்படி சட்டமன்ற, பாராளுமன்ற, ஊராட்சி மன்ற, தொகுதிகள் உருவாக்கிட வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.