பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

 ம.பா.கெஜராஜ்,

  பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

   ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  இந்நிலையில் காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் நீண்ட நாட்களாக தேடிவந்தனர். அவர் இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டு போலீசாரிடம் அவர் சிக்கவில்லை.

 அப்படியிருக்க அந்த ரவுடி வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

   அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று காக்கா தோப்பு பாலாஜியை நெருங்கியபோது, அவர் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டாராம். அதில்தனிப்படை போலீசார் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாம்.

  அத்துடன் போலீஸ் வாகனம் மீது குண்டு பாய்ந்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட போலீசார்

காக்கா தோப்பு பாலாஜி நோக்கி இரண்டு முறை சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

  உடல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

    சென்னை மாநகராட்சி கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டபின் நடைபெறும் 2வது என்கவுண்ட்டர் இதுவாகும்.