சி.எம்.சி.பெண் மருத்துவர் பாலியல் தாக்கு! குற்றவாளிகள் நால்வருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை! சத்துவாசாரியில் சிறார் குற்றவாளிகள் உருவாக்கம்!
ஜி.கே.சேகரன்,
சி.எம்.சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4-பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 25-ஆயிரம் அபராதமும் விதித்து வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வேலூர் மாவட்டம், காட்பாடியில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16 -ஆம் தேதி நள்ளிரவு, காட்பாடியில் உள்ள திரையரங்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் மருத்துவர், நாக்பூரை சேர்ந்த ஆண்மருத்துவருடன் சினிமா பார்த்துவிட்டு திரும்பினார்.
அப்போது இவர்கள் இருவரையும், பயணிகள் ஆட்டோ என்று கூறி, ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல், இருவரையும் வேலூர் பாலாற்றுப் பகுதிக்கு கடத்தி சென்று அங்கு பணம், ரூ 40 ஆயிரம் மற்றும் 2 சவரன் தங்க நகைகள் மற்றும் செல்போனை ஆகிவற்றை பறித்துக்கொண்டு,பெண் மருத்துவரை அந்த கும்பல் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பெண் மருத்துவர், ஆன்லைன் மூலமாக,வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர், தனிப்படை அமைத்து 5-பேர் மீது 13 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன், கூலி தொழிலாளி மணிகண்டன்(எ)மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் (எ)மண்டை மற்றும் 17-வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து செல்போன், பணம், நகை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணைக்கு பிறகு, இவர்களில் பார்த்திபன், மணிகண்டன் ( எ) மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் (எ) மண்டை மற்றும் ஒரு சிறுவன் என 5-பேரை வேலூர் மாவட்ட மகிளிர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஒரு சிறார் சென்னையில் உள்ள கெலீஸ் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.பின்பு, இவர்கள் 4-பேருக்கு 2022 ஏப்ரல் 15-ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட பார்த்திபன், மணிகண்டன் (எ) மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் ஆகிய நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
இவர்கள் மீது 496 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு, வேலூர் மகளிர் நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக நடந்து வந்தது இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
அதில் பார்த்திபன், மணிகண்டன் (எ) மணி, பரத்(எ) பாரா, சந்தோஷ் 4-பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார் இதனை அடுத்து பலத்த பாதுகாப்புடன் 4 குற்றவாளிகளும் அழைத்து செல்லப்பட்டு வேலூர் தொரப்பாடி மத்திய சிறையில் அடைத்தர்.
சத்துவாச்சாரியில் உள்ள நேரு நகர், வ.உ.சி.நகர் போன்ற பகுதிகளில் இளம் சிறார்கள் குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

admin
