பாதிரியாரை கைது செய்!  இந்து அமைப்பின் தலையீட்டால் தொடர்ந்த போராட்டம்!

பாதிரியாரை கைது செய்!  இந்து அமைப்பின் தலையீட்டால் தொடர்ந்த போராட்டம்!

ஜி.கே.சேகரன்,

 நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த பதினோராம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் ராஜ்கோட்டிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் விரைவு ரயில்  மாணவனின் அக்கா தன் தம்பிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கூறி ரயில் பெட்டியில் இருந்து இறங்க மறுத்ததால் அவரை பெண் போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர்.

 திருப்பத்தூரில்  நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பதினோராம் வகுப்பு படித்து வந்த முகிலன் என்ற மாணவன் கடந்த ஒன்றாம் தேதி காணாமல் போன நிலையில் நேற்று அதே பள்ளியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

  இந்த நிலையில் பள்ளியின் பாதிரியாரை கைது செய்ய கோரியும், பள்ளியை இழுத்த மூடு கோரியும் பல்வேறு கட்சியினரும், பெற்றோர்களும், உறவினர்களும்  பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு இதுவரை மாணவர்களின் சடலத்தை  வாங்க மறுத்து வருகின்றனர்.

  இந்த நிலையில் திடீரென இன்று மருத்துவமனையில் இருந்த உறவினர்கள் பாதரியார் மீது எவ்வித நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை என கூறி பள்ளியின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக மருத்துவமனையில் இருந்து வெளியே சென்ற போது காவல்துறையினர் கயிறுகட்டி அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது கயிறையும் தாண்டி உறவினர்கள் வெளியே சென்றனர். இதன்காரணமாக காவல்துறையினருக்கும், உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளும் முள்ளும் ஏற்பட்டது. 

 அதன்பின் நிதி உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வரும் லண்டன்மிஷன் பகுதியிக்கு சென்று லண்டன்மிஷன்

பகுதியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அதனை தொடர்ந்து மேலும் உறவினர்கள் ரயில் மறியலில் ஈடுபடுவதாக கூறி ரயில்வே ஸ்டேஷன் சாலையில் சென்றபோது போலீசார் பேரிகாட் போட்டு அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே கடும்  வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  அதனை தொடர்ந்து அங்கிருந்து சென்ற இறந்த பள்ளி மாணவன் முகிலனின் அக்கா பரமேஸ்வரி என்பவர் ராஜ்கோட் விரைவு ரயில் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தபோது அந்த ரயில் பெட்டியில் ஏறி என் தம்பியின் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

 மேலும் இதுவரை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளவில்லை என கூறி ரயில் பெட்டியில் ஏறிக்கொண்டு இறங்க மறுத்தார்.

 ரயில் கிளம்பாமல் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பரமேஸ்வரியை பெண் காவலர்கள்  அப்புறப்படுத்தினார்கள்  இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.

   இந்த போராட்டத்தின் பின்னணீயில் இந்து முன்னணியினர் இருப்பதை காணமுடிந்தது. இந்நிலையில் போராட்டம் நடத்திய அம்மாணவனின் உறவினர்களை எஸ்.பி.மயில்வானம் சமாதானப்படுத்த முயன்றார்.