தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு! கதறி அழுத பெற்றோர்கள்!
ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், கதிரிமங்கலம் அடுத்த ராஜகவுண்டர் வட்டம் பகுதி சேர்ந்த ஞானசேகர். இவருக்கு அசின் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி அஸ்வந்த் (3) மற்றும் ரிஷிவந்த் ஒன்றரை வயது என இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஞானசேகர் தன்னுடைய வீட்டின் அருகே புதிய வீடு கட்டி வருகிறார். இன்று வழக்கம் போல அசின் தனது முதல் பிள்ளையை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்
அப்போது ரிஷிவந்த் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் விழுந்தார்.
இந்த நிலையில் நீண்ட நேரம் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் தண்ணீர் தொட்டியை எட்டி பார்த்தபோது ரிஷிவந்த் உயிரிழந்த நிலையில் உள்ளதை பாரத்து பெற்றோர் கத்தி கதறினார். இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் ஒன்றரை வயது யாரும் இல்லாத நேரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுத காட்சி காண்பவர் நெஞ்சை கலங்க வைத்தது.

admin
