திருப்பத்தூர் கலெக்டர் வார்னிங்!

திருப்பத்தூர் கலெக்டர் வார்னிங்!

ஜி.கே.சேகரன்

 ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் 14 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணை 26 வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

 இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தரப்பகராஜ் ஆண்டியப்பனூர் அணையில் நீர் வழியும் பகுதியைப் பார்வையிட்டார்.

   பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.

  இருந்தபோதிலும் கூட ஆண்டியப்பனூர் அணையில் இருந்து வெளியேறும் உபரநீரால் பாம்பாறு அணை அருகே இருக்கும் 14 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்படுகிறது என்று ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்தார்.