மண் சரிவில் சிக்கியுள்ள ஏழு நபர்கள்! மீட்பு பணிகளை முடுக்கிவிட்ட ஆட்சியர்!

மண் சரிவில் சிக்கியுள்ள ஏழு நபர்கள்! மீட்பு பணிகளை முடுக்கிவிட்ட ஆட்சியர்!

ம.பா.கெஜராஜ்,

  மழை மற்றும் மண் சரிவு காரணமாக திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை மீது 7 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

 இந்நிலையில் மண்ணில் சிக்கி உள்ள ஏழு நபர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 இந்த பணியில் 30 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர், கமாண்டோ படையினர், காவல்துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறனர்.

  முதல் கட்டமாக வீட்டின் மேல் உள்ள மரங்களை அகற்றும் பணிகளை மீட்பு குழுவினர் மேற்கொண்டு வருவதுடன் பாதுகாப்பு கருதி இந்த பகுதியில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அரசு பள்ளிகள் மற்றும் திரையரங்குகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  மேலும் மரங்களை அகற்றிய பின்பு வீட்டின் மேல் குவிந்துள்ள மணல்கள் மற்றும் கற்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முழுவதும் மலைப்பகுதி என்பதால் குறுகலான பாதையை விரைவாக மீட்பு பணிகள் நடைபெறுவது சற்று தாமதமாக இருந்து வருகிறது.

  இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் மற்றும் எஸ் உள்ளிட்ட இரவு முதல் அங்கேயே இருந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார்.