பாலாற்றில் இராசாயன கழிவு நீர் கலப்பு! டேய் நீங்க திருந்தவே மாட்டீங்களா?

பாலாற்றில் இராசாயன கழிவு நீர் கலப்பு! டேய் நீங்க திருந்தவே மாட்டீங்களா?

ஜி.கே.சேகரன்,

   கனமழையை பயன்படுத்தி  பாலாற்றில் திறந்துவிடப்பட்ட தோல் கழிவுநீரால் நுரைப்பொங்கி ஓடுகிறது. இது குறித்து வாணியம்பாடி  கோட்டாச்சியர் நேரில் ஆய்வு.

   திருப்பத்தூர் மாவட்டம். ஃபெங்கல் புயல் காரணமாக ஆம்பூர் மற்றும்  வாணியம்பாடி  அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தற்போது வரை கனமழை பெய்து வரும் நிலையில், இந்த கனமழையை பயன்படுத்தி வாணியம்பாடியில் உள்ள சில  தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை பொதுசுத்திகரிப்பு நிலைத்திற்கு அனுப்பாமல் பாலாற்றில் திறந்து விட்டனர்.

 இதனால் ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு துர்நாற்றத்துடன்  அதிக அளவுநுரைப்பொங்கி ஓடுகிறது.

  இந்நிலையில்,  மாராப்பட்டு பாலாற்றில்  இன்று வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் அஜிதா பேகம் மற்றும் ஆம்பூர் வட்டாச்சியர் ரேவதி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்.

  மேலும் மழை பெய்தால், தோல் தொழிற்சாலைகள் தோல் கழிவுநீரை பாலாற்றில் திறந்து விடுவது வாடிக்கையாக இருப்பதாகவும், இதனால் பாலாற்று படுக்கைகள், உள்ள நிலத்தடி நீர்மட்டம்  மிகுந்த மோசமான நிலையை எட்டியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆனால் பாலாற்றில் தோல் கழிவுநீர்  கலக்கப்படவே இல்லை என்று தானே அதிகாரிகள் சொல்லுவார்கள். சரி விசுவாசம் விடுங்க பழகிடுச்சு.