திருப்பத்தூர் நகர காவல் நிலையம் பொதுமக்களால் முற்றுகை!புகாரை கண்டுக் கொள்ளாததால் பரபரப்பு!!

திருப்பத்தூர் நகர காவல் நிலையம் பொதுமக்களால் முற்றுகை!புகாரை கண்டுக் கொள்ளாததால் பரபரப்பு!!

 ஜி.கே.சேகரன்,

பணம் கேட்டு டார்ச்சர் வாலிபர் தற்கொலை, மோசடி பெண்ணை கைது செய்யாத போலீசாரை கண்டித்து உறவினர்கள் காவல் நிலையம் முற்றுகை.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கௌதமபேட்டை பகுதியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் கௌரவன் மகன் சுரேஷ்.

   இவர் தனியாருக்கு சொந்தமான கொரியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.இதனையெடுத்த மடவாளம் அடுத்த காளத்தீயூர் பகுதியை சேர்ந்த முனிசாமி மகள் சங்கீதா என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

 

இவர் சுரேஷிடம் பழகி வந்துள்ளார், இதனையெடுத்து ஆசை வார்த்தை பேசி நகை மற்றும் பணம் லட்ச கணக்கில் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

   மேலும் தினமும் பணம் கேட்டு சுரேஷை டார்ச்சர் செய்து ஒன்று பணம் கொடு அல்லது என் வழியில் விடு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன், நீ ஒதுங்கி போ, அல்லது செத்து விடு என கூறி உள்ளார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் கடந்த 05.02.25அன்று இந்த பெண்ணின் டார்ச்சர் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் எனவும் என்னுடைய மரணத்திற்கு காரணம் சங்கீதா தான் எனவே அவரை விட்டு விடாதீர்கள் என கூறி தூக்கு கயிறுடன் வீடியோ எடுத்து பதிவு செய்து பின்பு தற்கொலை செய்து கொண்டார்.

   இச்சம்பவம் குறித்து சுரேஷின் உறவினர்கள் அனைத்து ஆதாரங்களையும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் அளித்து அந்த பெண்ணை கைது செய்ய கோரி புகார் அளித்து உள்ளனா.¢ ஆனால் இதுவரை போலீசார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் சுரேஷின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.