டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயன்றவர்கள் அரெஸ்ட்!
கு.அசோக்,
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்மாவட்டம், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடந்தது.
மார்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஏழுமலை தலைமையில் சரோஜா,சிம்புதேவன்.,மணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மதுகடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட போது காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேற்படி டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள், மாணவர்கள் பெண்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடையை அகற்ற கோரியும் மேலும் மது குடிப்பவர்கள் செல்போன் திருட்டு பணம் பறிப்பில் ஈடுபடுவதால் கடையை மூடகோரி கோஷமிட்டனர்.
இந்த போராட்டம் நடந்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் மதுபானக்கடை திறந்ததால் மக்கள் முன்டியடித்து கொண்டு மதுவாங்கி சென்றனர்.
விளங்கிடும்,.
இதே போன்றதொரு போராட்டத்தை தமிழ்நாடு சுன்னத் ஜமாத் என்கிற அமைப்பு நடத்தவிருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.