அரசு அலுவலர்களின் அடாவடி! முதல்வர் திட்டத்திலேயே குளறுபடி! முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்!!

ம.பா.கெஜராஜ்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் - பூஞ்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றூம் இருளர் இன்த்தவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார்.
இந்த நிகழ்வு கடந்த நவம்பர் நான்கா தேதி நடந்தது.
இதில் நரிக்குறவர் 54 பேர், இருளர் 27 பேர் என, 81 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். வீடற்ற நரிக்குறவர் - 11, இருளர் - 11 என, 22 பேருக்கு, அரசு மானிய நிதி தலா 2.10 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்ட, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பணியாணை வழங்கியது.
வீடுகள் கட்டுவது குறித்து, வாரிய பொறியாளர் முருகதாஸ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் ஆகியோர், நேற்று பயனாளிகளிடம் ஆலோசித்தனர். தன்னார்வ தொண்டு நிறுவனம், பல ஆண்டுகளுக்கு முன், நரிக்குறவருக்கு கட்டிய, தொகுப்பு வீடுகள் இடையே உள்ள, குறுகிய பகுதியில் தான் பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்குதான் புதிய பயனாளிகளின் வீடுகள் கட்ட உள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயனாளிகள், சொந்தமாகவோ அல்லது கூடுதல் தொகை வழங்கி, ஒப்பந்ததாரர் மூலமாகவோ வீட்டை கட்டலாம் என, ஆலோசனையும் வழங்கினர். இதையறிந்து, வீடுகளில் வசிக்கும் நரிக்குறவர்களோ, 'தொகுப்பு வீடுகள் இடைவெளியில் குறுகிய இடத்தை, நாங்கள் பயன்படுத்துகிறோம். அங்கு புதிய வீடுகள் கட்டக்கூடாது' என, ஆவேசத்துடன் எதிர்த்தனர்.
நரிக்குறவ பயனாளிகள் கூறியதாவது: எங்களுக்கு வீடு கட்ட, முறையாக மாற்று இடம் ஒதுக்காமல், ஏற்கனவே உள்ள வீடுகளை ஏன் ஒதுக்குனீர்கள். ஆகவே மாற்று இடம் ஒதுக்க வேண்டும். முதல்வரே நேரடியாக வந்து பட்டா வழங்கினார் என்பதால், அனைத்தும் சரியாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அரசு அலுவலர்கள் இப்படி செய்கிறீர்களே என்று அங்கு வந்த அலுவலர்களை முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.