போதை பொருள்ஒழிப்பு தினம் பூங்காவில் குப்பை அள்ளிய காவல் துறையினர்! அதிகாரிகள் பாராட்டு!!

கு.அசோக்,
வேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்,
காவல்துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு பேரணி கோட்டை பூங்காவில் மாணவர்கள் போட்ட குப்பை சமூக பொறுப்புடன் அகற்றிய காவல்துறையினர் - வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கள்ளச்சாராய ஒழிப்பு சோதனை செய்து பேர்ணாம்பட்டு பகுதிகளில் அறவே கள்ளசாராயம் இல்லை சாத்கர் அல்லேரி மலை பகுதிகளில் சோதனை செய்து குற்றவாளிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம் விரைவில் கள்ளச்சாராயம் கட்டுபடுத்தபடும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பேட்டி.
வேலூர்மாவட்டம்,வேலூர் பழைய பைபாஸ் சாலையிலிருந்து காவல்துறையின் சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமானது நடந்தது இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார் இதில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் திரளான சுமார் 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகள் பல்வேறு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று வேலூர் கோட்டை பூங்காவில் ஊர்வலம் நிறைவடைந்தது.
பின்னர் பள்ளி மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுகொண்டனர் மது புகை குட்கா உள்ளிட்ட எந்த போதைக்கு அடிமையாகமாட்டோம் நண்பர்கள் யாரையும் அடிமையாக விடமாட்டோம் என உறுதி ஏற்றுகொண்டனர் போதை ஒழிப்பு கட்டுரை பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் கோப்பை சான்றுகளை வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முத்துசாமி வழங்கினார் பின்னர் மாணவர்களுக்கு அங்கு தின் பண்டங்களும் வழங்கப்பட்டது ஆனால் அவர்கள், "பூங்காவில் குப்பைகளை போட்டனர் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர்கள் வரையில் அனைவரும் இணைந்து சமூக பொறுப்புடன் குப்பைகளை அகற்றி அவ்விடத்தை தூய்மை செய்தது பாராட்டுகளை பெற்றது".
பின்னர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் சர்வதேச போதை எதிர்ப்பு நாளான இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினோம் வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக மாற்ற முழு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது பேர்ணாம்பட்டு பகுதியில் அறவே கள்ளச்சாராயம் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம் மேலும் காவல்துறையினர் சாத்கர் அல்லேரி உள்ளிட்ட மலை பகுதிகளிலும் சோதனை செய்து கள்ளச்சாராயத்தை அழித்து வருகிறோம் சாராயம் காய்ச்சும் குற்றவாளிகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் விரைவில் கள்ளச்சாராயம் கட்டுபடுத்தபடும் என கூறினார்
திருப்பத்தூர் மாவட்டம்,
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி கொடி அசைத்து துவக்கி வைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக போதை பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருளுக்கு எதிராக பதாகைகள் ஏந்திய போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரா பாண்டியன், இ.ஆ.ப. மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், இ.கா.ப. ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்தப் பேரணி பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தூய நெஞ்சக் கல்லூரி வரை பேரணியாக சென்றனர்.
இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இராணிப்பேட்டை மாவட்டம்,
இராணிப்பேட்டையில் நடைபெற்ற போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போதை வஸ்துக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் பேச்சு
இராணிப்பேட்டை மாவட்ட அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் உலக போதை ஒழிப்பு தினம் மற்றும் மருந்து பயன்பாடு கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் வளர்மதி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் வளர்மதி மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பகுதி மற்றும் பள்ளிக்கு அருகே போதை வஸ்துக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் 10581 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
மேலும், அவர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொக்ள்ளப்பட்டது.
அதில் நமது நாட்டின் இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் அதிகரித்து வருவதை தவிர்ப்போம், இளைஞர்கள் மத்தியில் போதை பொருள் துஷ்பிரயோகத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம், போதைப் பொருள் இல்லா நிலையை உருவாக்கி சமூகத்தின் ஆக்கபூர்வமான அமைதியை நிலை உருவாக்குவோம், போதை பொருளிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம் ஆட்சியருடன் இணைந்து அனைத்து அரசு அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் உறுதிமொழியினை எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்துபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி இ,கா.ப மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.