பெண் சிசு கால்வாயில் வீசப்பட்ட கொடுமை!

பெண் சிசு கால்வாயில் வீசப்பட்ட கொடுமை!

கு.அசோக்,

 வேலூர்மாவட்டம், வேலூரில் அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனை அருகே உள்ள கால்வாயில் பெண் சிசு ஒன்று வீசப்பட்டு கிடந்தது. தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் உடலை மீட்டனர்.

 இரவு பிறந்த பெண் சிசு கால்வாயில் வீசப்பட்டு இறந்து கிடந்தது, இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனா.¢ சம்பவ இடத்தில் வேலூர் வட்டாட்சியர் வடிவேல் தெற்கு காவல் ஆய்வாளர் காண்டீபன்,ஆகியோர் நேரில் சென்று சிசுவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இக்குழந்தை அரசு பெண்ட்லேண்ட் மருத்துவமனையில் பிறந்ததா அல்லது தனியார் மருத்துவமனையில் பிறந்து கால்வாயில் வீசப்பட்டதா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்