எடப்பாடி சொன்னபடியே தாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

எடப்பாடி சொன்னபடியே தாக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

அ.கார்த்திஸ்வரன்,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்கிற அந்த பயணத்தின் ஒரு கட்டமாக திருச்சி மாவட்டம் துறையூரில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ்  செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றுவளைத்த அதிமுகவினர் அதற்குள் ஏறி சென்று நோயாளி இருக்கிறாரா என தேடிப்பார்த்தனர்.

   ஆம்புலன்சில் நோயாளி இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் தாக்கியதால் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் துறையூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதே ஆம்புலன்சில் டெக்னீசியன் ஆக சென்ற கர்ப்பிணிப் பெண்ணும் அதிமுகவினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  முன்னதாக வேலூர் மாவட்டம் அனைக்கட்டு பகுதியில் எடப்பாடியின் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் புகுந்த போது அடுத்தமுறை இப்படி வந்தால் ஆம்புலன்ஸ் டிரைவர் பேஷன்ட் ஆகிவிடுவார் என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னது நினைவிருக்கலாம்.