டாடா தமிழகத்தில் மேலும் தொழிற்சாலையை அமைக்க முன்வரவேண்டும்! ரேஞ்ச் ரோவர் திறப்பு விழாவில் முதலமைச்சர் வேண்டுகோள்!

டாடா தமிழகத்தில் மேலும் தொழிற்சாலையை அமைக்க முன்வரவேண்டும்! ரேஞ்ச் ரோவர் திறப்பு விழாவில் முதலமைச்சர் வேண்டுகோள்!

 கு.அசோக்,

 டாடா நிறுவனமானது, வாகன உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது, அவை மேலும் பல தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ வேண்டும் -  பனப்பாக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டாடா  கார் உற்பத்தியை துவங்கி வைத்து பேச்சு - எம் ஓ எஸ் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல அவைகளை கண்காணித்து தொழில்களை துவங்க வைப்பது சிறந்தது அதை தான் தமிழகம் செய்து வருகிறது -இன்னும் சிலநாட்களில் திராவிட மாடல் அரசு செயல்பாட்டு திறனை  உலகிற்கு எடுத்து சொல்ல  முதலீடு செயல்பாட்டு மாநாடு இன்னும் சிலநாட்களில் நடத்த உள்ளோம் 100 திட்டங்களை இதில் செயல்படுத்த உள்ளோம் முதல்வர் பேச்சு

  இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் சிப்காட் பகுதியில் சுமார் 1600 ஏக்கர் பரப்பளவில் 9 ஆயிரம் கோடி முதலீட்டில் டாடா நிறுவனத்தில் ரேஞ்ச் ரோவர், ஜாக்குவார்  சொகுசு கார் உற்பத்தியை தமிழக முதல்வர் ஸ்டாலின்  ஆலையை திறந்து வைத்தார்.

 பின்னர் முதல் உற்பத்தியான காரை ஓட்டிப்பார்த்தார்.

 இதில் டாடா மோட்டார்ஸ் நிர்வாக அதிகாரிகள் சந்திரசேகர்,பாலாஜி ,தொழில் துறை அமைச்சர் ராஜாஅமைச்சர் காந்தி, மற்றும் அமைச்சர் நேரு,மாவட்ட ஆட்சியர் சந்திரகலா  உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

  இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பனப்பாக்கத்தில் 9 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த தொழிற்சாலை 14 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணுகிறது. தமிழகத்தில் டாடா நிறுவன வாகன உற்பத்தி தொழிற்சாலை இங்கு துவங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

   இந்தியாவிலேயே அதிக வாகன உற்பத்திகளை தமிழ்நாட்டில் தான் தயாரிக்கபடுகிறது இதன் மூலம் வாகன உற்பத்தியில் நாட்டில் முதலிடம் வகிக்கிறது தமிழ்நாடு இதே போன்று முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

 தொழில் துவங்க வருபவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளையும் தமிழக அரசு முன்னுரிமை அடிப்படையில் செய்து கொடுக்கிறது, அதனால் தான் இங்கு அதிக அளவு கார் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போடுவது மட்டும் முக்கியமல்ல அந்த எம்.ஓ.எஸ் களை கண்காணித்து அந்த தொழில்களை துவங்க வைப்பது தான் சிறந்தது அதை தான் தமிழகம் செய்கிறது.

 டாடா நிறுவனம் தமிழகத்தில் பல தொழில் களை நிறுவீ தமிழகத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது மேலும் ஒரு கோரிக்கையாக இந்த நிறுவனம் மேலும் பல தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைக்க முன் வரவேண்டுமென டாடா நிறுவனத்திற்கு கோரிக்கை வைக்கிறேன்.

    இதன் மூலம் வேலைவாய்ப்பும் கிடைக்கிறது இங்கு உற்பத்தி செய்யபடும் வாகனம் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யபடுகிறது.

   இன்னும் சிலநாட்களில் திராவிட மாடல் அரசு செயல்பாட்டு திறனை உலகிற்கு எடுத்து சொல்ல  முதலீடு செயல்பாட்டு மாநாடு நடத்த உள்ளோம்.

   100 திட்டங்களை இதில் செயல்படுத்த உள்ளோம் திட்டங்களை துவங்கி வைத்து அடிக்கல் நாட்டுவது என சிறப்பாக செயல்படுவதை வெளிப்படுத்துவோம் குறித்த நேரத்தில் கிடைக்கும் ஒப்புதல்களை இம்மாநாட்டில் காட்டுவோம் தமிழக அரசு கேரண்டி கொடுத்தால் காப்பாற்றும் என உலக முதலீட்டாளர்கள் நம்பி வந்துள்ளனர் தமிழகம் வாகனத்துறையில் உலக நாடுகளுடன் போட்டி போடுகிறது என பேசினார்.